/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/அகோபில அழகிய சிங்கர் சுவாமிகள்/சாதம் பிரசாதம் ஆகட்டும்!சாதம் பிரசாதம் ஆகட்டும்!
ADDED : செப் 29, 2009 03:05 PM

உணவை நல்லமுறையில் சமைப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவ்வுணவு தூய்மையான மனதுடன் செய்ய வேண்டும் என்பதும் ஆகும். சமையல் செய்பவரின் மனோபாவமும் அவர் செய்யும் உணவில் கலந்து விடுவது இயற்கையே. சமைப்பவர் நல்ல குணமும், ஒழுக்கமும் கொண்டவராக இருக்க வேண்டும். மிகவும் தூய்மையை விரும்புபவர்கள் நிச்சயமாக தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று முற்காலத்தில் நம் முன்னோர்கள் நெறிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். <br>நாம் நமக்காக சமைக்கும்போது அதை சாதம் என்று அழைக்கிறோம். அதே உணவினை ஆண்டவனுக்கு படைத்த பின் மீண்டும் நம்மிடம் கொண்டுவரும்போது பிரசாதமாகி விடுகிறது. 'பிர' என்றால் 'கடவுள் தன்மை'. உணவு என்பது மட்டுமல்ல, கடவுளுக்குப் படைக்கும் எந்தப்பொருளும், மேலும் புனிதம் பெற்று நம் மனதைத் தூய்மைப்படுத்துகிறது. கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவினால்(பிரசாதத்தினால்) நம் உணர்வுகள் மேன்மைபெற்று வாழ்வு அர்ததமுள்ளதாக மாறிவிடுகின்றன.<br><br>